Monday, December 25, 2017

UNDERSTANDING VASTU SHASTRA !!!!! (TAMIL)



வாஸ்துசாஸ்திரம் என்பது ஒரு வீட்டை அமைக்கும் பொழுது பின்பற்றவேண்டிய முறையாகும் இதில் பல நன்மைகள் உண்டு.

ஒரு வீட்டை கட்டும்பொழுது வாஸ்துவை பின்பற்றி கட்டினால் வாழ்வில் பலநன்மைகளும் திகட்டாத இன்பமும் நம்மை வந்து அடையும் என்பது அனைவராலும் நம்பப்படும் நிதர்சனமான உண்மையாகும் இதற்கு சான்றாக பல புராண கதைகள் உண்டு ஆகவே இதை பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

தலைவாசல்

தலைவாசலை கிழக்கு மேற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைக்கலாம் இதில் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் அமைக்கும் தலைவாசல் பலருக்கு துன்பத்தை மட்டுமே கொடுக்கும் ஒருசிலருக்கு வேண்டுமானால் நன்மையை கொடுக்கலாம் அது அவர்களின் நட்சத்திரத்தை பொறுத்தே அமையும் ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தலைவாசல் அமைப்பது சிறந்தது ஆகும்.

வரவேற்பறை

வரவேட்ப்பறையை பொறுத்தவரை மனையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அமைக்கலாம் இருப்பினும் மற்ற அறைகளின் வாஸ்துவை பொறுத்து வரவேட்ப்பறையை அமைப்பது நன்மையை தரும்.

பூஜையறை

பூஜையறை ஆனது மனையின் மேல்பகுதி அதாவது கன்னிமூலையான தென்மேற்கு பகுதியில் அமைப்பது நன்மையை தரும் இருப்பினும் தெற்கு மற்றும் மேற்கு திசையிலும் அமைக்கலாம் இருப்பினும் பூஜையறையில் வாயில் கிழக்கு அல்லது வடக்கில் அமைக்க வேண்டும்.

சமையலறை

சமயலறையானது அக்னி மூலையான தென்கிழக்கு பகுதியில் அமைப்பது நன்மையை தரும்.

படுக்கையறை

படுக்கையறையை பொறுத்தவரை மனையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அமைக்கலாம் இருப்பினும் மற்ற அறைகளின் வாஸ்துவை பொறுத்து படுக்கையறையை அமைப்பது நன்மையை தரும்.

கழிவறை

கழிவறையை மனை அல்லது அறையின் வடமேற்கு பகுதியில் அல்லது தென்கிழக்கு பகுதியில் அமைக்கலாம் கழிவுநீர் குழாய் மேற்கு பக்கம் அமைப்பது நன்று கழிவுநீர் தொட்டியை வடமேற்கு பகுதியில் அல்லது தென்கிழக்கு பகுதியில் அமைக்கலாம்.

மாடிப்படிகள்

மனையின் வடமேற்கு பகுதியில் அல்லது தென்கிழக்கு பகுதியில் அமைக்கலாம்.

நிலத்தடி தண்ணீர் தொட்டி

நிலத்தடி தண்ணீர் தொட்டியை ஈசானியமூலையான வடகிழக்கு பகுதியில் அமைப்பது நன்று.

மாடி தண்ணீர் தொட்டி

மாடி தண்ணீர் தொட்டியை தென்மேற்கு பகுதியில் அமைக்கலாம்.

சுற்றுச்சுவர்வாயில்

சுற்றுச்சுவரின் வாயிலை நான்குதிசையில் எந்தத்திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம் அதில் தவறு ஒன்றுமில்லை..


banner
Previous Post
Next Post

0 comments: