Tuesday, December 19, 2017

HEALTH BENEFITS OF MURUNGAI KEERAI (DRUM STICK LEAVES)




முருங்கை இலை பொடியில் உள்ள மருத்துவ குணங்கள்


1.       முருங்கையில் போதுமான அளவு விட்டமின் , சி மற்றும் உள்ளது. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.

2.       முருங்கை பொடி உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும். முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது

3.       முருங்கை பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.

4.       முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கு உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

5.       முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சி மற்றும் நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

6.       முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது புண்கள் மற்றும் இரத்தம் வெளியேறுவதை வேகமாக குறைக்க உதவுகிறது.

7.       முருங்கை இலை பொடியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.


8.       முருங்கை இலை பொடியை டீயாக குடிக்கலாம். இந்த பவுடரை தினமும் அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு குடிக்கலாம்.
banner
Previous Post
Next Post

0 comments: