Friday, December 22, 2017

Actor Siddharth Controversial Tweet !!!!!






2G வழக்கின் தீர்ப்பிற்கு முன் பின் சித்தார்த்தின் சர்ச்சை ட்வீட்கள் - குவியும் எதிர்ப்பும் ஆதரவும்.!

கடந்த 2009-ல் தொடங்கிய 2G ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி என வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், இந்த தீர்ப்பை பற்றி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகர் சித்தார்த்தும் தீர்ப்பு வருவதற்கு முன்னரும் பின்னரும் ட்வீட் செய்துள்ளார், இவருடைய டீவீட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன.

தீர்ப்பு வருவதற்கு முன்னர் சித்தார்த் ராசா, கனிமொழி நடிப்பில் உருவாகி உள்ள திருட்டு பயலே-1 படத்தின் விமர்சனம் இன்று வெளியாகிறது, ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நடித்திருந்த திருட்டு பயலே-2 போலவே இந்த படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். பின்னர் இந்த டீவீட்டை நீக்கி விட்டார்.

தீர்ப்பு வெளியான பின்னர் சூப்பர் ஹிட் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அனைவருமே விடுதலை என் இந்தியா சிறந்த நாடு, இந்திய அரசியலின் குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துக்கள் எனவும் தேசிய கீதம் ஒலிக்கிறது. அனைவரும் எழுந்து நில்லுங்கள் எனவும் ட்வீட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இவருக்கு தி.மு.க தொண்டர்களிடம் இருந்து எதிர்ப்பும் ரசிகர்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கலந்த வண்ணம் உள்ளது.
banner
Previous Post
Next Post

0 comments: