Thursday, December 28, 2017

"கோபம்" ANGER MANAGEMENT - WHAT IT KILLS??? (TAMIL)



சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்


மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

கோபம் உன்னையே அழித்து விடும்:

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல்ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது

நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது

எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போதுஇப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்துகழுதைஎன்று திட்டும்போது நாம்குரங்குஎன்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்


கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்:

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.
கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.
இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன அதனால் கோபத்தை அளவோடு வைத்து கொள்ளுங்க

திருகுறள் 
அதிகாரம்வெகுளாமை 
குறள் இயல்துறவறவியல்
குறள் பால்அறத்துப்பால்
குறள்:305

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

“If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay.”
banner
Previous Post
Next Post

0 comments: