Dated 26-12-2017
ஆண் எனக்கூறி 3 பெண்களை மணந்த பெண் கைது..
ஆந்திராவில் ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு அருகில் உள்ள இடிகலபாடு கிராமத்தை சேர்ந்த ரமாதேவி என்ற பெண் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். 18 வயதான ரமாதேவி தன்னை ஆண் என்று கூறி ஆண் போல் வேஷம் போட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 பெண்களை மோசடியாக திருமணம் செய்து கொண்டார்.
ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், தனக்கு அவசர வேலைகள் உள்ளதாகவும், விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்து செல்ல சென்று குடிவைப்பதாகவும் கூறி சென்று விடுவாராம். ஆனால் ரமாதேவி திரும்பி வந்ததே இல்லையாம்.
இந்நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிர்மலா, ஆண் என்று தன்னை ஏமாற்றி ரமாதேவி மோசடியாக திருமணம் செய்து கொண்டார் என்று ஜம்மல்மடுகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் ரமாதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Credits: NEWS 18
0 comments: