பனங்கிழங்கு
பனங்கிழங்கு நிறைய பேர் இந்தப்பெயரை கூட இப்போது தான் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இந்த பனங்கிழங்கு என்பது பனமரத்தில் விளைவது கிடையாது. பனமரத்தின் அடியிலும் விளையாது. ஒரு சிறு பனமரம் தான் இந்த பனங்கிழங்கு. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா?
பனைமரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும்.இளசாக இருக்கும் போது அதை சாப்பிடலாம். ஆனால் முத்திப்போனால் சாப்பிட ஆகாது. இதை இப்படியே விடாமல் மண்ணில் புதைத்துவிட்டால் கொஞ்ச நாட்களில் முளைவிட்டு பனைமரம் வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே தோண்டிப்பார்த்தால் அது தான் பனங்கிழங்கு. அதை பிடுங்கி வந்து வேகவைத்து சாப்பிடுவர்.
மக்காச்சோளத்தில் உள்ளது போல முடிகள் நிறைய காணப்படும். நார்ச்சத்து அதிகம் இந்த கிழங்கில். ஒரு பெரிய பனைமரமே இந்த கிழங்கில் தான் உள்ளது. இதனால் இதை சாப்பிட்டால் நமக்கு பலம் கிடைத்துவிடுகின்றது.
உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு கிடைக்கும் சீசனில் சாப்பிட்டால், உடனே பருமனாகிவிடுவார்கள். நாம் நீரில் சேர்க்கும் உப்பைப் பொறுத்து இந்த கிழங்கின் ருசியானது இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே இந்த கிழங்கில் உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப்பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் மேலோங்கும்.
இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மஞ்சள் பனங்கிழங்கிற்கு சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படும். நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம். வாயுத்தொல்லை நீங்கும். மிக்சியில் போட்டும் மாவாக்கி வைத்துக் கொள்ளலாம். வேகவைக்காத பனங்கிழங்கை நறுக்கி காயப்போட்டு மாவாக்கி அதை சுவைக்கு ஏற்ப கூழாக தயாரித்தோ, உப்புமா செய்தோ, தோசையாக தயாரித்தோ சாப்பிடலாம். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். பனங்கிழங்கை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து குடித்தால் பசி தீரும். சில நோய்களும் கட்டுப் படும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும்.
0 comments: