Friday, January 5, 2018

WHAT WE REAP FROM VEGETABLE!!!!



VEGETABLE

Vegetables play an important role in human nutrition. Most are low in fat and calories but are bulky and filling. They supply dietary fibre and are important sources of essential vitamins, minerals, and trace elements. Particularly important are the antioxidant vitamins A, C, and E.


When vegetables are included in the diet, there is found to be a reduction in the incidence of cancer, stroke, cardiovascular disease, and other chronic ailments. Research has shown that, compared with individuals who eat less than three servings of fruits and vegetables each day, those that eat more than five servings have an approximately twenty percent lower risk of developing coronary heart disease or stroke. The nutritional content of vegetables varies considerably; some contain useful amounts of protein though generally they contain little fat, and varying proportions of vitamins such as vitamin A, vitamin K, and vitamin B6; provitaminsdietary minerals; and carbohydrates.



நுரையீரல்புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

காய்கறிகள்என்பது இயற்கை நமக்கு அளித்துள்ளகொடை எனலாம். அந்த வகையில்காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச்சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையானஎண்ணற்ற சத்துகள் உள்ளன.
அதேநேரத்தில்காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவேஇருக்கும்.
பச்சைமற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளைநாம் அதிகம் உண்பதால், தொண்டைபுற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில்பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் சத்தினை அளிக்கக்கூடியபொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானதுபுற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகைகாய்கறிகளில் அடங்கும்.
நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின்சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய்வராமல் தவிர்க்கலாம்.
மிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சைநிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றைஉண்பதால் உடலின் நோய் எதிர்ப்புசக்தி மேம்படும்.
வேறுசில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்துஇருப்பின் அனீமியா எனப்படும் இரத்தசோகை நோய் ஏற்படும். பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறுவகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.
முட்டைகோஸ்உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்குஅவை அவசியமாகிறது.

அனைத்துகாய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள்மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,
தவிரமிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகைவெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ்அதிகம் உள்ளது.
உடலின்பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்குமுக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்துஉள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில்அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளைபராமரிக்க ஏதுவாகிறது.
எனவேஅதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாகஇருங்கள்.
banner
Previous Post
Next Post

0 comments: