Diabetes
Diabetes, often referred to by doctors as diabetes mellitus, describes a group of metabolic diseases in which the person has high blood glucose (blood sugar), either because insulin production is inadequate, or because the body's cells do not respond properly to insulin, or both
சர்க்கரைநோய்
சர்க்கரைநோய் என்பது என்ன? இரைப்பைக்கும்முன்சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம்(Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுஇந்த இன்சுலின் தான்.
ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின்அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர்.
டயாபட்டீஸ் – சர்க்கரைநோய் வரக் காரணங்கள்:
பரம்பரைஒரு காரணமாகலாம்
உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
நகர்புறவாழ்வியல் சூழல்
முறையற்றஉணவு பழக்கம்
மது, புகை, போதை பொருட்களால்
உணவில்அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்புஉணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
சர்க்கரை நோயின்அறிகுறிகள்:
அடிக்கடிசிறுநீர் கழித்தல்
சிறுநீர்கழித்ததும் கை, கால், மூட்டுவலி
அதிகவியர்வை (துர்நாற்றாத்துடன்)
சிறுநீரில்ஈ,எறும்பு மொய்த்தல்
அடிக்கடிதாகம், அதிக பசி
தூக்கமின்மை
காயம்பட்டால்ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
அதிகஅளவில் இனிப்பு பொருட்களை உண்பது
நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
வேகாதஉணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்தபொருட்கள் உண்பதால்
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
1. டயாபடீஸைவிரட்டலாம்:
அதிகஎடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச்சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சியே மிக உயர்ந்த வழி.
முறையானஉடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில்உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள்.
ஏற்கெனவேசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சிமிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரைநோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம்சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிகமிகக் குறைவு.
2. காலைஉணவைச் சாப்பிட மறக்காதீர்கள்:
காலையில்எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச்சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலைஉணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும்என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பதுநல்லது.
3. மகிழ்வானசூழல்:
பொதுவாகநன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வரவாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச்சக்தியும், நல்ல மூடும் உருவாகும்என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.
இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாகவாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின்அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில்பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
4. ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:
உயர்ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அடிக்கடி மாறிமாறி, இதய நோய், இதயத்தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில்வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய்தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.
சர்க்கரைநோய் வந்த பின்னர், அதைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால்போதும்.
சர்க்கரைநோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னிபிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
வாழைப்பூ, வாழைப்பிஞ்சு, வாழைத்தண்டு, சாம்பல் பூசணி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கத்தரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம்பிஞ்சு, அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
முருங்கைகீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைகீரை, தூதுவளை கீரை, முசுமுசுக்கைகீரை, துத்தி , கீரை, மணத்தக்காளி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை, சிறு குறிஞ்சான் கீரை, புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
விளாம்பழம், அத்திப்பழம், பேரீத்தம்பழம், நெல்லிக்காய், நாவல்பழம், மலைவாழை, அன்னாசி, மாதுளை, எலுமிச்சை, ஆப்பிள் , பப்பாளி, கொய்யா, திராட்சை, இலந்தைபழம், சீத்தாப்பழம்
சர்க்கரையை கட்டுபடுத்தும்சாறுவகைகள்:
எலுமிச்சைசாறு -100மி.லி, இளநீர் -100மி.லி, வாழைத்தண்டு சாறு -200மி.லி, அருகம்புல் சாறு-100மி.லி, நெல்லிக்காய் சாறு -100மி.லி, கொத்தமல்லி சாறு-100மி.லி, கறிவேப்பிலைச் சாறு -100மி.லி,
தவிர்க்க வேண்டியவைகள்:
சர்க்கரை(சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
அடிக்கடிகுளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
0 comments: