Monday, January 1, 2018

Arudra Darshan : "ஆருத்ரா தரிசனம்"




Arudra Darshan is celbrated in the Tamil month of Margazhi coinciding with December – January. This day falls on the full moon night of this month when the Tiruvadirai (Arudra) star rules over. Notably, this happens to be the longest night of the year. Arudra is the star that symbolizes golden red flame, which is none else than Lord Shiva at his cosmic dance. The main highlight of this occasion is having the darshan of Shiva as Natraj, the god at his cosmic dance.


Arudra Darshan is a very grand event happening in the Shiva temples especially where the image of Natraj (dancing Shiva) is installed. This is a festival celebrated with great fervour and celebrity in Chidambaram, a temple dedicated solely to Natraj in Tamilnadu. It is considered highly auspicious and beneficial to view the procession of Lord Natraj on this day. All day long, there are holy baths and pujas conducted in the temples and at the end of the day, a special dish known as Kali is distributed to devotees.


ஆருத்ரா தரிசனம்


“ நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்” எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும். திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான். இருப்பினும் சிவாலயங்களில் மிகமுக்கியமானது ஆருத்ரா தரிசனம். கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.


அந்த காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”  என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை. 
நடராஜரின் வலதுகால், முயலகன்என்பவன் மீதுஇருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்' என்பர். இவன் வளைந்துநெளிந்து, அஷ்டகோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்பர். காக்காவலிப்பு நோய்வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில்கிடப்பாரோ, அப்படிஒரு நிலை. "முசலகம்' என்றால், "காக்கா வலிப்பு!' இதனால், அவன், "முசலகன்' என்றாகி, தமிழில் முயலகன்ஆனான். முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன். மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டுமிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ளவேண்டும். அதை, வெளியே காட்டஅனுமதிக்கவே கூடாதுஎன்பது இதன்தத்துவம். இடதுகாலை, "குஞ்சிதபாதம்' என்பர். "குஞ்சிதம்' என்றால், "வளைந்து தொங்குதல்' எனப்பொருள். ஆம்... அவரது இடதுகால் வளைந்துதொங்குகிறது.

திருவாதிரை களி

சேந்தனார் ஓர்விறகுவெட்டி. அவர்சிதம்பரம் அருகேயுள்ள ஓர்ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்தசிவபக்தர். தினமும்ஒரு சிவனடியாருக்கு உணவளித்தபின்னரே, தான் உணவருந்துவார்.

ஒரு நாள்அதிகமாக மழைபெய்து விறகுகள்ஈரமாயின; அதனால்அன்று அவரால்விறகு விற்கமுடியவில்லை. அதனால்அரிசி வாங்ககாசு அவரிடம்இல்லை. எனவேஅன்று கேள்வரகில் களிசெய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும்தென்படவில்லை. மனம்நொந்த சேந்தனாரின் பக்தியைஉலகிற்கு உணர்த்தவிரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தடைந்தார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள்சிதம்பரம் கோயில்கருவறையைத் திறந்தனர். என்னஅதிசயம்; நடராஜப்பெருமனைச் சுற்றிஎங்கும் களிச்சிதறல்கள். உடனேஅரசருக்கு அறிவித்தார்கள். அரசர்அன்று இரவுதான் கண்டகனவை எண்ணினார். கனவில்நடராஜப் பெருமான் தான்களியுண்ணச் சென்றதைத் தெரிவித்துஇருந்தார். அதன்படிசேந்தனாரைக் கண்டுபிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அன்று சிதம்பரம் நடராஜப்பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில்அமர்த்திய பின், அரசர் உட்படஎல்லோரும் தேரைவடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாகசேற்றில் தேர்அழுந்திச் சிறிதும் அசையாதுநின்றது. அரசர்மிகவும் மனவருந்தினார். அப்போதுஅசரீரியாக "சேந்தாநீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும்அறியாத யான்எப்படிப் பாடுவேன் என்றுநடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்குஅருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன்அருளால் "மன்னுகதில்லை வளர்கநம்பக்தர்கள் வஞ்சகர்போயகல" என்றுதொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்றுபாடல்கள் இறைவனைவாழ்த்திப் பாடினார். உடனேதேர் நகர்ந்தது. சேந்தனாரின்கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்துவணங்கினார்கள். அரசர்தாம் கண்டகனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர்வீட்டிற்குக் களியுண்ண நடராஜப்பெருமானே வந்தார்என்றதை அறிந்துமனமுருகினார். அன்றையதினம் திருவாதிரை நாள்என்றும், இன்றும்ஆதிரை நாளில்நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச்சொல்லப்படுகின்றது.

ஐம்பெரும் அம்பலங்கள்
ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம்வெள்ளியம்பலம்இரத்தினம்பலம்தாமிர அம்பலம்சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம்மதுரைதிருவாலங்காடுதிருநெல்வேலிகுற்றாலம் ஆகிய ஐந்து ஊர்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.
·         சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்

·         மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்

·         திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்

·         திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்

·         குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).

இவை கனகசபைஇரத்தினசபைவெள்ளி சபைதாமிர சபைசித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.
banner
Previous Post
Next Post

0 comments: