Tuesday, January 2, 2018

Millet (கம்பு) !!! - The Health we Ignored in Fast World



நோய் எதிர்ப்புசக்தியைத் தூண்டும் கம்பு!
இந்தியாவில்விளையும் தானிய வகைகளில் கம்பும்ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும்காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாககம்பு இருந்து வந்துள்ளது. இதுஇந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன்மருத்துவக் குணத்தையும் காண்போம்.
நம்முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானியவகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல்வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால்இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளைமறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டுவந்தனர். நாவின் சுவையை அதிகம்விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
இரவுநேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிகநேரம் ஒரே இடத்திலிருந்து வேலைசெய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில்வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம்கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சிகாலை வேளையில் அருந்தி வந்தால் உடல்சூடு குறையும்.
சோர்வு நீங்க
மனச்சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடினவேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள்புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதியவேளையில் அருந்தி வந்தால் உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல்கூழ் செய்து விற்பனை செய்துவருகிறார்கள்.
அஜீரணக் கோளாறுநீங்க
அஜீரணக்கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்திவந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிநன்கு பசியெடுக்கும்.
வயிற்றில்புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும்வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம்கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசிசேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கிமதிய உணவில் சேர்த்துக் கொண்டால்குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய.
உடல்வலுவடைய கம்பு மிகச் சிறந்தஉணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண்நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தைவலுவாக்கும்.
* சிறுநீரைப்பெருக்கும்.
* நரம்புகளுக்குபுத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தைசுத்தமாக்கும்.
* உடலில்தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய்எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவைவிருத்தி செய்யும்.
* இளநரையைப்போக்கும்.


*************
அதிகமாககம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டுஆரோக்கியமாக வாழலாம்.
*************
banner

Related Posts:

  • சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 நவகிரகங்களும் அவ்வப்போது அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ர… Read More
  • Health Benefits of Ground Nut !!!! வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!நிலக்கடலைகுறித்த மூட நம்பிக்கைகள் அவநம்ப… Read More
  • Admiration of Shri Brihadeeswara Temple, Thanjavur !!!! (TAMIL)கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ ச… Read More
  • Health Benifits of Red Kidney Bean - (Rajmah) !!!!ரத்த அழுத்தத்தைகட்டுக்குள்வைத்திருக்கும்ரெட்பீன்ஸ்(ராஜ்மா)ரெட் பீன்ஸ்கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிக… Read More
  • HEALTH BENEFITS OF MURUNGAI KEERAI (DRUM STICK LEAVES) முருங்கை இலை பொடியில் உள்ள மருத்துவ குணங்கள்1.       முருங்கையில் போது… Read More
  • UNDERSTANDING VASTU SHASTRA !!!!! (TAMIL)வாஸ்துசாஸ்திரம் என்பது ஒரு வீட்டை அமைக்கும் பொழுது பின்பற்றவேண்டிய முறையாகும் இதில் பல நன்மைகள் உண்ட… Read More

0 comments: